INDIA VS ENGLAND: கண்கலங்கியபடி வெளியேறிய விராட் கோலி.. ரசிகர்களின் நெஞ்சை நொறுக்கிய வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணியுடனான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில், மைதானத்தில் இருந்து கலங்கிய கண்களுடன் விராட் கோலி வெளியேறிய வீடியோ ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சூப்பர் 12 சுற்றின் முடிவுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனிடையே இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்தியா.
அடிலெய்டில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் நிதானமாக ஆடிய விராட் கோலி அரைசதம் எடுத்து அவுட் ஆனார். மற்றொரு பக்கம் நிதானமாக ஆட்டத்தை துவங்கிய ஹர்திக் பாண்டியா இறுதியில் அபாரமாக ஆடி 63 ரன்களை குவித்தார்.
இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றிபெற செய்தனர். இதன்படி 16 ஓவர் முடிவில் வெற்றி இலக்கை எட்டி வெற்றியை ருசித்தது இங்கிலாந்து.
இதனையடுத்து, போட்டி முடிவடைந்த பிறகு வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பிய நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் கைகொடுத்தனர். அப்போது, கண்கலங்கிய நிலையில் சோர்வுடன் காணப்பட்ட விராட் கோலி தன்னுடைய தொப்பியால் முகத்தை மறைத்தபடி நடந்து சென்றார். இந்த காட்சி ரசிகர்களை சோகத்தில் ஆழத்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலமாக நவம்பர் 13 ஆம் தேதியன்று நடக்க உள்ள டி 20 உலக கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது இங்கிலாந்து.
That's Virat Kohli hiding his tears at the end 💔@imVkohli Love and support 💓#INDvsENG #T20Iworldcup2022 #ViratKohli𓃵 pic.twitter.com/H8BysRiGYO
— Mihir Dhawan (@ImMdhawan_18) November 10, 2022

மற்ற செய்திகள்
