தமிழில் பேசி அசத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷதாப் கான்.. ஶ்ரீகாந்த் & பாவனா செய்த கலாட்டா! வைரல் வீடியோ 🤣

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Pichaimuthu M | Nov 10, 2022 12:12 PM

உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டி முடிந்ததும் பேட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் தமிழில் பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Shadab Khan Speaking Tamil with Srikanth and Bhavna

Also Read | "இந்தியா Vs பாகிஸ்தான் மேட்ச விடுங்க, இத பாருங்க".. இந்திய குடும்பத்திற்கு பாகிஸ்தானில் கெடச்ச வரவேற்பு!!.. Trending!!

ஆஸ்திரேலியாவில்  நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடர்,  தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.

Shadab Khan Speaking Tamil with Srikanth and Bhavna

நேற்று புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியுசிலாந்து அணியை  பாகிஸ்தான் அணி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்த்து ஆடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, நியுசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில்  டாஸ் வென்று பேட்டிங் செய்த நியுசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் வெற்றி இலக்கை 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து எட்டியது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி நியுசிலாந்து அணியை வென்றது. பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Shadab Khan Speaking Tamil with Srikanth and Bhavna

இன்று வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் எதிர்த்து விளையாட உள்ளது.

இந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவார்கள். இந்த அரையிறுதி & இறுதிப்போட்டி டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.

Shadab Khan Speaking Tamil with Srikanth and Bhavna

அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 10) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. குரூப் பி பிரிவில் இந்தியா 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் குரூப் ஏ பிரிவில் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது கவனமும் இந்த போட்டியை எதிர்நோக்கி உள்ளது.

Shadab Khan Speaking Tamil with Srikanth and Bhavna

இந்நிலையில் நேற்றைய பாகிஸ்தான் - நியுசிலாந்து போட்டி நிறைவடைந்த பின்னர் ஷதாப் கான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ஶ்ரீ காந்த் & பாவனா பாலகிருஷ்ணன் எடுத்தனர். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதில் அளித்த ஷதாப் கான், இறுதிப்போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறினார். பின்னர் முன்னாள் வீரர் ஶ்ரீ காந்த், தமிழில் "செம Win" என  கூறுமாறு ஷதாப் கானிடம் கேட்கிறார்.‌உடனே ஷதாப் கானும் தமிழில் ''செம வின்'' என கூறுகிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Also Read | இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் பாரதப் பிரதமர் மோடி!.. பிரபல தமிழக பல்கலைக்கழகத்தில் விழா!

Tags : #CRICKET #SHADAB KHAN #SHADAB KHAN SPEAKING TAMIL #SRIKANTH #BHAVNA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shadab Khan Speaking Tamil with Srikanth and Bhavna | Sports News.