ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா.. புகார் அளித்த பெண் சொல்வது என்ன? பரபரப்பு தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு காயம் ஏறட்டதன் காரணமாக, இத்தொடரில் இருந்து அவர் விலக, அவருக்கு பதிலாக பண்டாரா அணியில் இணைந்தார். ஆனால் தனுஷ்கா குணதிலகா காயம் அடைந்தாலும் தங்களது அணியுடன் ஆஸ்திரேலியாவிலேயே தங்கி இருந்தார்.

இந்த நிலையில் தான், கடந்த 5 ஆம் தேதி சிட்னியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து அடுத்த நாள் காலை (அக்டோபர் 6 -ஆம் தேதி) இலங்கை அணி நாடு திரும்பியது. அதே சமயம், தனுஷ்கா குணதிலகா சிட்னி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் குணாதிலகா கைது செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், நேற்று தனுஷ்கா குணதிலகா சிட்னி நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனிடையே, தனுஷ்கா குணதிலகாவுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடை விதிப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.
மேலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தீர்ப்பு குணாதிலகாவுக்கு எதிராக வரும்பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.
இதனிடையே, குணதிலகாவால் பாதிக்கப்பட்ட பெண் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல், இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குணதிலகா, அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற போது அவரை அடிக்க முற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதில், அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அவர் மூளை ஸ்கேன் வரை எடுத்து பார்த்ததாகவும் தற்போது குற்றஞ்சாட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே போல, டேட்டிங் செயலி மூலம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குணதிலகா அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்படுத்தியதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும் அந்த பெண்ணின் விருப்பமின்றி குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குணதிலகா அவர் மீது அத்துமீற நுழைந்தது பற்றியும் தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
முதலில், கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருந்ததையடுத்து தற்போது குணதிலகா காரணமாக அந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக வெளியாகி உள்ள தகவல், இன்னும் சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது.
Also Read | மனைவி கொடுத்த ஹார்லிக்ஸ்.. கொரியரில் வந்த விஷம்.. கேரளாவில் அடுத்த அதிர்ச்சி!!

மற்ற செய்திகள்
