"உங்களை ரொம்ப பிடிக்கும் விராட்.. ஆனா".. கோலிக்கு பீட்டர்சன் வச்ச கலகல கோரிக்கை.. அடிச்ச ஷாட்லாம் கண்ணுமுன்னாடி வந்துபோகுமா இல்லையா.?😂

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Nov 09, 2022 03:24 PM

நடப்பு T20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.

Kevin Pietersen Request For Virat Kohli Ahead Of T20 WC Semifinal

Also Read | '2 மணி நேரத்துல சென்னை TO கன்னியாகுமரி தூரமே போயிடுமா..?'.. புயலை மிஞ்சும் அசுர வேகம்.. சீனாவின் அதிரடி ரயில்..!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று சில தினங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதில், குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது. குரூப் 1 ல் இருந்து முதல் அணியாக நியூசிலாந்து தகுதி பெற, இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெற்று இங்கிலாந்து அணி அடுத்ததாக தகுதி பெற்றிருந்தது. மேலும் குரூப் 2  வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.

Kevin Pietersen Request For Virat Kohli Ahead Of T20 WC Semifinal

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கு நகைச்சுவையான கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். நேற்று தான் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் கமெண்ட் செய்துள்ள பீட்டர்சன்,"விராட் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என உங்களுக்குத் தெரியும். ஆனால், வியாழன் அன்று மட்டும் கொஞ்சம் கூலாக இருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

Kevin Pietersen Request For Virat Kohli Ahead Of T20 WC Semifinal

இந்திய அணியின் தற்போதைய நிலையை பொறுத்தவரையில் விராட் கோலி தெறிக்கும் பார்மில் இருக்கிறார். ஷாட்களை கனெக்ட் செய்யும் விதத்திலேயே தான் வின்டேஜ் கோலி தான் என்பதை நிரூபிக்கிறார் கோலி. உலகக்கோப்பையில் கோலி அதிரடி காட்டுவது வழக்கமான ஒன்றுதான். அவர் என்றுமே எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவால். நடப்பு T20 உலகக்கோப்பை தொடரில் 3 அரை சதங்களை விளாசி ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறார். இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 246 ரன்கள் எடுத்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Kevin Pietersen Request For Virat Kohli Ahead Of T20 WC Semifinal

நாளை (நவம்பர் 10) இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா இங்கிலாந்தை சந்திக்க இருக்கிறது. இந்நிலையில், விராட் கோலியின் பதிவில் கெவின் பீட்டர்சன் போட்டுள்ள இந்த கமெண்ட் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Also Read | வானம் எல்லோருக்கும் சொந்தம்.. விண்ணில் பாய இருக்கும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.. முழு விபரம்..!

Tags : #CRICKET #KEVIN PIETERSEN #VIRAT KOHLI #T20 WC SEMIFINAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kevin Pietersen Request For Virat Kohli Ahead Of T20 WC Semifinal | Sports News.