தமிழில் பேசி பட்டையை கிளப்பிய சூர்யகுமார்.. வீடியோவை பார்த்து ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Nov 09, 2022 01:01 PM

இங்கிலாந்து அணியை டி 20 உலக கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நாளை (10.11.2022) எதிர்கொள்ள உள்ளது.

suryakumar yadav speaks in tamil fans reacts

Also Read | "ஜெயிக்க போறது இந்தியா!!, Finals-ல இந்தியாவுடன் மோதப் போவது இந்த நாடு தான்".. இது டிவில்லியர்ஸ் கணக்கு..! T20WorldCup22

நேரடியாக சூப்பர் 12 சுற்றிற்கு தகுதி பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி, முதல் இரு போட்டிகளில் முறையே பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளை அடுத்தடுத்த போட்டிகளில் வீழ்த்தி இருந்தது.

இதன் காரணமாக மொத்தம் 8 புள்ளிகள் பெற்ற இந்திய அணி, தங்களின் பிரிவில் முதலிடம் பிடித்து அரை இறுதி சுற்றுக்கும் முன்னேற்றம் கண்டிருந்தது. நடப்பு டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி.

suryakumar yadav speaks in tamil fans reacts

நட்சத்திர வீரரான விராட் கோலி, மொத்தம் 5 போட்டிகள் விளையாடி 246 ரன்கள் எடுத்து நடப்பு டி 20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து, ஐந்து போட்டிகள் விளையாடி 225 ரன்களுடன் சூர்யகுமார் யாதவ் மூன்றாம் இடத்திலும் உள்ளார். இருவரும் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதால், அரை இறுதியிலும் கோலி மற்றும் சூர்யகுமார் ஆகியோர் அசத்துவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

suryakumar yadav speaks in tamil fans reacts

அதிலும் குறிப்பாக, 360 டிகிரியிலும் பறந்து பறந்து பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களுக்கு விரட்டி வருகிறார். சுழன்று சூர்யகுமார் யாதவ் அடிக்கும் ஷாட்கள், பெரிய அளவில் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. எங்கு பந்து போட்டாலும் அடிப்பேன் என்பது போல சூர்யகுமார் ஆடி வருகிறார்.

இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் தமிழில் பேசிய வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் சார்பில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் தொகுப்பாளினி பாவனா ஆகியோர் சூர்யகுமார் யாதவிடம் பேட்டி எடுத்திருந்தனர்.

suryakumar yadav speaks in tamil fans reacts

அப்போது, எப்படி இப்படி எல்லாம் ஷாட் எடுக்கிறீர்கள் என சைகையுடன் சூர்யகுமாரிடம் கேள்வி கேட்டார் ஸ்ரீகாந்த். இதற்கு பதிலளித்த சூர்யகுமார், "இதனை நீண்ட காலமாக நான் பயிற்சி எடுத்து வருகிறேன். அதே போல, சிறு வயதில் எனது நண்பர்களுடன் ரப்பர் பந்து கிரிக்கெட்டும் நிறைய ஆடி உள்ளேன். அப்போது தன்னம்பிக்கையுடன் இப்படி நிறைய ஷாட்கள் வெளியே அடித்துள்ளேன். அதை தான் தற்போதும் செயல்படுத்தி வருகிறேன்" என கூறினார்.

தொடர்ந்து, "மாஸ் பண்றோம்" என தமிழிலும் ஒரு வார்த்தையை சூர்யகுமார் யாதவ் இந்த வீடியோவில் பேசி இருந்தார். முன்னதாக, "கலக்குறே மச்சான்" என ஹர்திக் பாண்டியா தமிழில் பேசி இருந்ததும் அதிகம் வைரல் ஆனது போல, சூர்யகுமார் தமிழில் பேசியதும் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

 

Also Read | துபாயில் ஹோட்டல் வேலை.. இந்தியருக்கு அடிச்ச ஜாக்பாட்.. கோடி ரூபா கெடச்சதும் எடுத்த நெகிழ வைக்கும் முடிவு!!

Tags : #CRICKET #SURYAKUMAR YADAV #SURYAKUMAR YADAV SPEAKS IN TAMIL #T20 WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Suryakumar yadav speaks in tamil fans reacts | Sports News.