T20 WORLD CUP 2022 : "இந்தியா FINALS போய்டும் போலயே".. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்.. எல்லாத்துக்கும் அந்த ஒரு UMPIRE தான் காரணம்.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் வைத்து தற்போது 8 வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
Also Read | "முடி கொட்டுறது நிக்கவே இல்ல".. Treatment எடுத்தும் சரி ஆகாத விரக்தியில் இருந்த இளைஞர்.. துயர சம்பவம்!!
சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள், நாளை (09.11.2022) சிட்னி மைதானத்தில் மோத உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள், 10.11.2022 அன்று அடிலெய்ட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் அணி நிச்சயம் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என ரசிகர்கள் குறிப்பிட்டு வரும் நிலையில், அவர்கள் சொல்லும் காரணம் தான் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது. அரை இறுதி போட்டிகள் நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், இரண்டு போட்டிகளுக்குமான கள நடுவர்கள், மூன்றாம் நடுவர்கள், நான்காம் நடுவர்கள் மற்றும் Referee யார் என்பது குறித்த விவரத்தினை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் அரை இறுதி போட்டியில் குமார் தர்மசேனா மற்றும் பால் ரீஃபில் ஆகியோர் கள நடுவர்களாக செயல்பட உள்ளனர்.
மேலும் இந்த போட்டியில், Richard Kettleborough என்ற நடுவர் கள நடுவராகவோ அல்லது வேறு நடுவராகவோ பணியாற்றவில்லை. இதன் காரணமாக தான் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறி விடும் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு காரணம், கடந்த சில உலக கோப்பை தொடர்களில் ரிச்சர்டு நடுவராக செயல்பட்டு இந்திய அணி களமிறங்கி இருந்த நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது என்பது தான்.
2014 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய போது ரிச்சர்ட் கள நடுவராக இருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. அதே போல, 2015 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலக கோப்பையின் அரை இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்த போதும் ரிச்சர்ட் நடுவராக செயல்பட்டிருந்தார்.
இதன் பின்னர், 2016 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பையின் அரை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்த போது ரிச்சர்ட் தான் நடுவராக பணியாற்றி இருந்தார். 2019 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்த சமயத்தில், தோனி ரன் அவுட்டான் போது நடுவர் ரிச்சர்ட் கொடுத்திருந்த ரியாக்ஷன் இன்றளவிலும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு தருணமாகும்.
இப்படி உலக கோப்பை தொடரில் இந்திய அணி நாக் அவுட் சுற்றில் நடுவராக இருந்த ரிச்சர்ட், இந்த முறை அரை இறுதியில் இல்லை என்பதால் நிச்சயம் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என ஜாலியாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.