ஆஸ்திரேலியாவில் கைதான தனுஷ்கா குணதிலகா.. இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட பரபர அறிக்கை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் வாரியம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Also Read | "அது ரிஸ்க்கான விஷயம்".. மஸ்க்கையே அதிர வச்ச மாணவர்.. வெயிட் பண்ணி மஸ்க் எடுத்த முடிவு.. வைரல் ட்வீட்.!
டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு காயம் ஏறட்டதன் காரணமாக, இத்தொடரில் இருந்து அவர் விலக, அவருக்கு பதிலாக பண்டாரா அணியில் இணைந்தார். ஆனால் தனுஷ்கா குணதிலகா காயம் அடைந்தாலும் தங்களது அணியுடன் ஆஸ்திரேலியாவிலேயே தங்கி இருந்தார்.
இந்த நிலையில்தான் கடந்த 5 ஆம் தேதி சிட்னியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து அடுத்தநாள் காலை (அக்டோபர் 6 -ஆம் தேதி) இலங்கை அணி நாடு திரும்பியது. அதே சமயம், தனுஷ்கா குணதிலகா சிட்னி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் குணாதிலகா கைது செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், நேற்று தனுஷ்கா குணதிலகா சிட்னி நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனிடையே, தனுஷ்கா குணதிலகாவுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடை விதிப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.
மேலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தீர்ப்பு குணாதிலகாவுக்கு எதிராக வரும்பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.
இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா. சிட்னி போலீசாரால் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட அவருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
Also Read | ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த மனைவி.! கண்டித்தும் கேட்காததால் கணவர் செய்த பகீர் காரியம்..?

மற்ற செய்திகள்
