ஒரே பாட்டுல உலக FAMOUS ஆன சிறுமி.. தேடிக் கண்டுபிடித்து சர்ப்ரைஸ் கொடுத்த டிஜிபி சைலேந்திர பாபு..வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கானா பாடல் பாடிய சிறுமியை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு.
Also Read | "இதைவிட என்ன வேணும்".. மாவட்ட கலெக்டரை மனதார வாழ்த்திய பாட்டி.. வைரலாகும் கலெக்டரின் ட்வீட்..!
போக்குவரத்தின் தேவை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மக்களின் பாதுகாப்பு குறித்தும் அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. சாலை விபத்துகளை தடுக்க மாநில அரசுகள் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், 5 வருடங்களுக்கு முன்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுமி ஒருவர் கானா பாடலை பாடியிருந்தார்.
இந்த பாடல் சமீபத்தில் இணையத்தில் மீண்டும் வைரலானது. இதனை அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அந்த சிறுமியை சந்திக்க விருப்பப்படுவதாக தெரிவித்திருந்தார். மேலும், சிறுமி பாடும் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்த அவர்,"இந்த குழந்தையைப்போல யாரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. இவரின் தொடர்பு எண் இருந்தால் பகிரவும்" எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து, அந்த சிறுமியின் விபரங்களை அதிகாரிகள் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
13 வயதான ஜாய்ஸ் எனும் சிறுமியை நேரில் வரவழைத்த டிஜிபி சைலேந்திர பாபு அவருக்கு பாராட்டு தெரிவித்ததுடன் சான்றிதழையும் வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். மேலும், ஜாய்ஸிடம் அந்த விழிப்புணர்வு பாடலை பாடும்படி அவர் கேட்க, சிறுமியும் பாடியுள்ளார். இந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து,"சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கானா பாடல் பாடிய இளங்குயிலைக் கண்டுபிடித்து விட்டோம். 13 வயது ஜாய்ஸ், அவரின் கனவு நனவாக வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியிடம் தொடர்ந்து பேசிய டிஜிபி அவருடைய எதிர்கால லட்சியம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், தொடர்ந்து இதுபோன்ற விழிப்புணர்வு பாடல்களை பாடும்படியும் சிறுமி ஜாய்ஸை அவர் ஊக்குவித்தார். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.