T 20 WORLD CUP 2022 : கேப்டன்கள் எடுத்த செல்ஃபி.. SEMI FINALS வர டீம் பத்தி அப்பவே இருந்த 'செம' கனெக்ஷன்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் வைத்து தற்போது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
Also Read | தனியாக இருந்த கணவன், மனைவி.. பட்டப்பகலில் கேட்ட அலறல் சத்தம்.. குலை நடுங்க வைக்கும் கொடூரம்!!
சூப்பர் 12 சுற்றின் முடிவுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது.
முன்னதாக, சூப்பர் 12 சுற்றின் ஒவ்வொரு போட்டிகளும் விறுவிறுப்பாக சென்றதால் இறுதி வரை எந்த அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்பதில் முழுக்க முழுக்க பரபரப்பு உருவாகி இருந்தது.
இறுதியில், குரூப் 1 ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி இருந்த முதல் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதி போட்டியில் மோதி இருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 169 ரன்கள் என்ற இலக்கை எட்டி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் முன்னேறி உள்ளது. நவம்பர் 13 ஆம் தேதியன்று, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள், மெல்போர்ன் மைதானத்தில் மோத உள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா ஒரு முறை டி 20 உலக கோப்பையை கைப்பற்றி உள்ளதால் இந்த முறை வெல்லும் அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உலக கோப்பை தொடர் ஆரம்பமாகும் போது எடுத்த புகைப்படத்தில் அரையிறுதிக்கு வரும் அணிகள் குறித்து இருந்த Coincidence தொடர்பான செய்தி, தற்போது பலரையும் வியக்க வைத்துள்ளது.
உலக கோப்பைத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக 16 அணிகளின் கேப்டன்களும் இணைந்து செல்ஃபி ஒன்றை எடுத்திருந்தனர். இதில், 16 கேப்டன்களுக்கு பின்னால் அனைத்து அணிகளின் கொடிகளும் வரிசையாக இருந்தது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் கொடிகள் அடுத்தடுத்தும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளின் கொடிகள் அடுத்தடுத்தும் இருந்தது.
அந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியதுடன் மட்டுமில்லாமல், அடுத்தடுத்து இருந்த அணிகள் தான் மோதவும் செய்திருந்தது. இது தொடர்பான புகைப்படங்களை தற்போது பகிர்ந்து வரும் ரசிகர்கள், சிறப்பான Coincidence என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | "எது, LCUல தோனியா?".. வர்ணனை செஞ்சிட்டு இருந்தப்போ லோகேஷ் சொன்ன சூப்பர் விஷயம்!!