ரோஹித்துக்கு என்னங்க ஆச்சு??.. வெளியான பரபரப்பு தகவல்.."அரை இறுதி நெருங்குற நேரத்துலயா இப்டி??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டு8 வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வரும் நிலையில், அரை இறுதி போட்டிகள் ஆரம்பமாக உள்ளது.

முன்னதாக நடைபெற்ற சூப்பர் 12 சுற்றுகளில் ஏராளமான விறுவிறுப்பான சம்பவங்களும், பல திருப்புமுனைகளும் அரங்கேறி இருந்தது.
இதன் பின்னர், நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
இதன் முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள், நாளை (09.11.2022) சிட்னி மைதானத்தில் மோத உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள், 10.11.2022 அன்று அடிலெய்ட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதனிடையே, இறுதி போட்டிக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்பது குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் பலரும் தங்களின் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது. இந்த முறை அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளதால், 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு டி 20 உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா உடல்நிலை குறித்து சமீபத்தில் வெளியாகி இருந்த தகவல் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டிக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு மத்தியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சிக்கு மத்தியில் காயம் அடைந்தததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது வலது கையில் பந்து பட்டதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் காயத்தால் சிறிது நேரம் பயிற்சியில் இருந்து அவர் வெளியேறவும் செய்திருந்தார். தொடர்ந்து, கொஞ்ச நேரம் கழித்து குணமடைந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், மீண்டும் ரோஹித் ஷர்மா பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மீண்டும் பயிற்சியில் அவர் களமிறங்கினாலும் தொடர்ந்து அவரது காயத்தில் முன்னேற்றம் இருக்குமா என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதம் இருப்பதால் ரோஹித் ஷர்மா உடல்நிலை பற்றி வெளியாகி உள்ள தகவல், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

மற்ற செய்திகள்
