'என்ன தாண்டி அவருகிட்ட போய்டுவியா நீ?'.. 'ஹிட் மேனின் அசத்தலான கேட்ச்'.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Nov 22, 2019 04:31 PM

வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டித் தொடரை இந்திய அணி 2-1 என்கிற விதத்தில் வென்றுள்ள நிலையில், இந்திய அணி தற்போது  வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரிலும் தற்போது இந்திய அணி தீவிரமாக விளையாடி வருகிறது.

unimaginable catch by Rohit Sharma at the slip INDvBAN pink

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா வென்றுள்ள நிலையில், கொல்கத்தாவில் தொடங்கியுள்ள 2வது மற்றும் கடைசி போட்டியில் டாஸ் வென்ற  வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடத் தொடங்கியது. இதில் இந்திய அணி, அபாரமான பந்துவீச்சினை கொடுத்துவந்தது.

உமேஷ் யாதவின் பந்துவீச்சில், எதிரணியின் கேப்டன் அடித்த பந்து ஸ்லிப்பில் இருந்த கேப்டன் கோலியிடம் சென்றது. ஆனால் விடுவாரா ரோஹித்? பந்து அங்கு செல்வதற்கு முன்பாகவே பாய்ந்து சென்று ஆச்சர்யப்பட வைத்த ஒரு கேட்சினை அசத்தலாக பிடித்துள்ளார்.  இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags : #ROHITSHARMA