தன்னை ‘அன்ஃபாலோ’ செய்த பிரபல வீரருக்கு.. ‘வாழ்த்து’ சொன்ன ஹிட்மேன்.. ‘வைரலாகும் ட்வீட்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Nov 21, 2019 08:48 PM
ரோஹித் ஷர்மா தன்னை ட்விட்டரில் அன்ஃபாலோ செய்த கிரென் பொல்லார்டுக்கு வாழ்த்து சொன்னதும், அதற்கு அவர் பதிலளித்த ட்வீட்டும் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் போட்டிகளில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடி வரும் ரோஹித் ஷர்மாவுக்கும், கிரென் பொல்லார்டுக்கும் இடையே நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் பொல்லார்டு திடீரென ரோஹித் ஷர்மாவை ட்விட்டரில் அன்ஃபாலோ செய்ய, அது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து ரோஹித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பொல்லார்டுக்கு ‘Happy Unfriendship Day’ வாழ்த்துக் கூறி ஒரு விளம்பரத்தையும் பதிவிட்டுள்ளார். அதற்கு பொல்லார்டு, “இது இன்னும் முடிந்துவிடவில்லை” என INDvsWI ஹேஷ்டாக்குடன் பதிலளித்துள்ளார். இதன்பிறகே இவை அனைத்தும் அடுத்ததாக நடைபெற உள்ள இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கான விளம்பரம் எனத் தெரியவந்துள்ளது.
This isn’t over, @ImRo45! 😤#UnfriendshipDay is on! #INDvWI @StarSportsIndia
— Kieron Pollard (@KieronPollard55) November 21, 2019
