‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனை’.. ‘சேவாக் பாணியில் சிக்சருடன்’.. ‘தெறிக்கவிட்ட ஹிட் மேன்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Oct 19, 2019 06:06 PM
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து தொடக்கவீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் (10), புஜாரா (0), கோலி (12) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் விளையாடிய ரோஹித் ஷர்மா - ரஹானே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளது. ரோஹித் ஷர்மா 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ள நிலையில் மோசமான வானிலை காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 224 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்தப் போட்டியில் டீன் பியட் பந்தை சிக்ஸருக்கு சேவாக் பாணியில் தூக்கி அடித்து ரோஹித் சர்வதேச டெஸ்டில் தனது 6வது சதத்தை அடித்துள்ளார். இது நடப்பு தொடரில் அவருடைய 3வது சதம் ஆகும். இதற்கு முன்பாக இந்திய வீரர்களில் சுனில் கவாஸ்கர் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் போட்டியின் மூலம் ரோஹித் ஷர்மா 14 சிக்ஸர்களுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
