உங்க 'ரொமான்ஸை' கொஞ்சம் நிறுத்துறீங்களா?.. ரெண்டு 'டீமும்' செஞ்ச வேலையை பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 22, 2019 03:41 PM

ஐபிஎல் அணிகளில் மிகவும் வலிமை வாய்ந்த அணிகளாக சென்னை, ஹைதராபாத் அணிகள் திகழ்கின்றன. சென்னை அணியை தோனியும், ஹைதராபாத்  அணியை கனே வில்லியம்சனும் வழிநடத்தி வருகின்றனர்.

IPL 2020: CSK and SRH jolly conversation on Twitter

இந்தநிலையில் ஹைதராபாத் அணி வில்லியம்சனின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து,'' என்னுடைய குழந்தைகளிடம் சொல்லுங்கள் நான் மிகவும் கூலானவன்,'' என தெரிவித்து இருந்தது. இதைப்பார்த்த சென்னை அணி, வில்லியம்சனும் -தோனியும் ஐபிஎல் கப்புடன் ஆக்ரோஷமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,'' இதை என்னுடைய குழந்தைகளிடம் சொல்லுங்கள்,'' என கனே சொல்வது போல கிண்டல் செய்தது.

பதிலுக்கு ஹைதராபாத் அணி, ''குளிர்காலம் வருகிறது,'' என தெரிவித்தது. இதைப்பார்த்த சென்னை அணி,'' அப்போ சூரியன் உதிக்காதா? என கிண்டலுடன் கேட்டது. இதற்கு ஹைதராபாத்,'' உண்மை என்னன்னா குளிர்காலத்துல கூட சூரியன் உதிக்கும்,'' என கூற முடிவாக சென்னை அணி,'' மஞ்சள் எப்போதும் உங்கள் கூடவே இருக்கும் சூரியன்,'' என நீண்ட இந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இவர்கள் இருவரின் உரையாடலை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் உங்க ரொமான்ஸை நிறுத்துங்கப்பா, என கிண்டல் செய்து வருகின்றனர்.

Tags : #IPL #CSK #SRH