‘தீபாவளிக்கு வாழ்த்து சொன்ன ஹிட் மேன்’.. ‘ட்விட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Oct 28, 2019 12:41 PM

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன ரோஹித் ஷர்மாவை நெட்டிசன்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Fans Tear Apart Rohit Sharma For His Diwali Message

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா உலகக் கோப்பை தொடரிலும், அதன்பிறகான போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரிலும் அதிரடியாக விளையாடிய அவர் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா நேற்று ட்விட்டரில் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், “அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளி இன்னும் அதிக ஒளியை நம் அனைவருடைய வாழ்க்கையிலும் கொண்டு வரட்டும். தீபங்கள் ஏற்றி இந்த தீபாவளியைக் கொண்டாடுவோம். எந்தவொரு பட்டாசையும் வெடிப்பதற்கு முன் இதுபோன்ற மற்ற உயிர்களையும் மனதில் நினைவு படுத்திக்கொள்ளுங்கள். இவ்வளவு இவை பயப்படுவதைப் பார்ப்பது மிகவும் கொடுமையானது” எனக் கூறி பட்டாசு சத்தத்தைக் கேட்டு நாய்க்குட்டிகள் பயப்படும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். நீங்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஜெயிக்கும்போதும், மற்ற விழாக்களிலும் பட்டாசு வெடிப்பதே இல்லையா என பலரும் அவரை சாடி வருகின்றனர்.

 

 

 

 

 

 

Tags : #ROHITSHARMA #TEAMINDIA #DIWALI #TWITTER #CRACKERS #WISHES #FANS #SLAM