"ஹேப்பி பர்த்டே ஆட்டுக்குட்டி".. DJ பார்ட்டி எல்லாம் வச்சு அமர்க்களப்படுத்திய உரிமையாளர்.. யாரு சாமி இவங்க..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தில் தங்களது ஆடு குட்டிகளை ஈன்றதை பார்ட்டி வைத்து கொண்டாடியிருக்கிறார்கள் ஒரு குடும்பத்தினர். இந்நிலையில், இந்த கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | "இதைவிட என்ன வேணும்".. மாவட்ட கலெக்டரை மனதார வாழ்த்திய பாட்டி.. வைரலாகும் கலெக்டரின் ட்வீட்..!
பொதுவாக கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டில் ஆடு, மாடு மற்றும் கோழி ஆகியவற்றை வளர்ப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பர். விலங்கினங்கள் என்ற பாகுபாடு எல்லாம் அவர்களிடத்தில் இருப்பதில்லை. தங்களது குடும்பத்தில் ஒருவராகவே இந்த விலங்கினங்களை கருதுகிறார்கள் மக்கள். அதனை நிரூபிக்கும் விதமாக தங்களுடைய ஆடு குட்டி போட்டதை விழாவாக கொண்டாடியிருக்கிறார்கள் உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதி.
உத்திர பிரதேச மாநிலத்தின் பண்டா பகுதியில் உள்ள கன்ஷி ராம் காலனியில் வசித்துவருபவர் ராஜா. ஆட்டோ ஓட்டுநரான ராஜா தனது வீட்டில் ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் தனது வீட்டில் வளர்ந்துவரும் ஆட்டை அன்புடன் வளர்த்து வந்திருக்கின்றனர் இந்த தம்பதியர்.
இந்நிலையில், இவர்களது ஆடு சில தினங்களுக்கு முன்னர் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த இந்த தம்பதியினர் இதனை கொண்டாட நினைத்திருக்கின்றனர். இதனையடுத்து, வீட்டில் கேக் வெட்டுவது என முடிவெடுத்திருக்கிறார் ராஜா. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளூர் மக்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கிறது. டிஜே பார்ட்டி, விருந்து என இந்த பிறந்தநாள் விழா அமர்க்களப்பட்டிருக்கிறது.
இந்த விழாவுக்கு வந்திருந்த உள்ளூர் மக்களும் கம்பளம் உள்ளிட்ட பொருட்களை பரிசாக அளித்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய ராஜா,"விலங்குகளை எங்கள் குழந்தைகளாக கருதி, அவற்றின் பிறந்தநாளை ஆரவாரத்துடன் கொண்டாட முடிவு செய்தோம். நாங்கள் எங்களுடைய குழந்தைகளுக்கு குபேர் மற்றும் லக்ஷ்மி என்று பெயரிட்டுள்ளோம். நான் அவர்களை ரிக்ஷாவில் சவாரிக்கு அழைத்துச் செல்கிறேன்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பாகவும் ராஜாவின் ஆடு குட்டிகளை ஈன்றபோது இதேபோல பாட்டு, விருந்து என கொண்டாடியிருக்கிறார். இதனிடையே, தற்போது புதிதாக பிறந்திருக்கும் ஆட்டுக்குட்டிகளை தனது ஆட்டோவில் மகிழ்ச்சியுடன் சவாரி அழைத்துச் சென்றுவருகிறார் இவர். இந்த பிறந்தநாள் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.