"எது, LCUல தோனியா?".. வர்ணனை செஞ்சிட்டு இருந்தப்போ லோகேஷ் சொன்ன சூப்பர் விஷயம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Nov 10, 2022 04:26 PM

ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

lokesh kanagaraj about ms dhoni in lcu fans reacts

Also Read | லாட்டரில கெடச்ச ₹ 81 கோடி.. "ஆனாலும் இந்த ஒரு விஷயத்துக்காக தான் மனுஷன் வெயிட்டிங்ல இருக்காராம்"...

சூப்பர் 12 சுற்றின் முடிவுகளில், இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது.

முன்னதாக, சூப்பர் 12 சுற்றின் ஒவ்வொரு போட்டிகளும் விறுவிறுப்பாக சென்றதால் இறுதி வரை எந்த அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்பதில் முழுக்க முழுக்க பரபரப்பு உருவாகி இருந்தது.

இறுதியில், குரூப் 1 ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி இருந்த முதல் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறி இருந்தது.

lokesh kanagaraj about ms dhoni in lcu fans reacts

இதனைத் தொடர்ந்து, தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதி போட்டியில் மோதி வருகிறது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் வரண்னையாளராக நடிகர் ஆர்.ஜே. பாலாஜியுடன் கலந்து கொண்டார். அப்போது, தான் முன்பு கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பது தொடர்பாக நிறைய சுவாரஸ்ய தகவலை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து கொண்டார்.

அதே போல, தளபதி 67 அப்டேட் பற்றிய கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில் தான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

lokesh kanagaraj about ms dhoni in lcu fans reacts

இர்பான் பதான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் திரைப்படங்களில் நடித்து வருவது போல, எந்த வீரரை LCU Universe க்குள் எடுத்து வர வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை ரசிகர் ஒருவர் முன் வைத்திருந்தார். இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், எனக்கு தோனியை மிகவும் பிடிக்கும் என்றும், அவரை LCU யூனிவர்சில் இணைக்க விரும்புவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

தோனி மற்றும் LCU Universe ஆகியவற்றை ஒப்பிட்டு லோகேஷ் கனகராஜ் பேசியுள்ள விஷயம், ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Also Read | தனியாக இருந்த கணவன், மனைவி.. பட்டப்பகலில் கேட்ட அலறல் சத்தம்.. குலை நடுங்க வைக்கும் கொடூரம்!!

Tags : #CRICKET #T20 WORLD CUP SEMI FINALS #LOKESH KANAGARAJ #MS DHONI #LOKESH KANAGARAJ ABOUT MS DHONI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Lokesh kanagaraj about ms dhoni in lcu fans reacts | Sports News.