'கொரோனாவ தடுக்க நிதி வேணுமா'?...'பிரபல கிரிக்கெட் வீரரின் ஐடியா'... நெட்டிசன்கள் கேட்ட ஒரே கேள்வி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 09, 2020 01:23 PM

கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக, இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் கூறியுள்ளார்.

Shoaib Akhtar\'s suggestion for fund collection to fight COVID-19

உலகின் பல நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால், பல நாடுகளின் பொருளாதாரம் அடியோடு முடங்கி கிடக்கிறது. இதனால் பலர் வேலை இழக்கும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆசிய நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.

இந்நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்ட  இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், ''தற்போது நாம் அனைவரும் கடினமான காலகட்டத்தில் இருக்கிறோம். இதனை எதிர்கொள்ள இந்தியா, பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும்.

இதில் யார் ஜெயிக்கிறார்கள் அல்லது தோற்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை, இரு நாடுகளும் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்கு சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம். தற்போது அனைவ்ரும் வீட்டில் டிவி முன்பு தான் அமர்ந்து இருக்கிறார்கள். அதிக அளவில் பார்வையாளர்களை ஈர்க்க முடியும். துபாய் போன்ற பொதுவான இடத்தில் இந்த தொடரை நடத்த ஏற்பாடு செய்யலாம். இந்த போட்டியால் இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் உறவு துளிர்க்கவும், இரு நாட்டு உறவு மேம்படவும் வாய்ப்புள்ளது'' என கூறியுள்ளார்.

இதற்கிடையே தற்போது சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என அனைவரும் கூறி வரும் நிலையில், கிரிக்கெட் போட்டி எப்படி சத்தியம் என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்துள்ள அக்தர், ''ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் இந்த போட்டியை நடத்தலாம் எனவும், அதுவும் நிலைமை சற்று சரியான பின்பு நடந்த வேண்டும்'' எனவும் அவர் கூறியுள்ளார்.