வீட்டைவிட்டு 'வெளியே' வந்தா 'இது' கட்டாயம்... இல்லன்னா 'நடவடிக்கை' பாயும்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என, டெல்லி, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மாநிலங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், மாநில அரசுகள் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து உள்ளன. அந்த வகையில் ஊரடங்கின் போது வீட்டைவிட்டு வெளியில் வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம்(Face Mask) அணிய வேண்டும் என மஹாராஷ்டிரா, உத்தர பிரதேச, டெல்லி மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்து உள்ளன.
வீட்டைவிட்டு வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மஹாராஷ்டிரா மாநில அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதேபோல டெல்லி அரசும் முகக்கவசம் கட்டாயம் என தெரிவித்து இருக்கிறது. மேலும் உத்தர பிரதேசம், சண்டிகர், நாகலாந்து, ஒடிசாவிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
