“இந்தியாவுக்கு மட்டுமில்ல.. மனித குலத்துக்கே உதவும் வலுவான தலைமை”... நன்றிப்பெருக்குடன் ட்வீட் போட்ட ட்ரம்ப்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 09, 2020 11:37 AM

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கான தடையை நீக்கக் கோரி இந்தியப் பிரதமரிடம் பேசிய ட்ரம்ப், மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதித்தால் அது பாராட்டுக்குரியது என்றும் கூறினார். ஆனால் அவ்வாறு கேட்டுக்கொண்ட பின்பும் மருந்து ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதிக்காவிட்டால், எதிர்காலத்தில் பதிலடி இருக்கும். ஏன் பதிலடி இருக்கக் கூடாது? என்று ட்ரம்ப் மிரட்டும் தொனியில் பேசியிருந்தார்.

thank you PM Modi for helping not just India, but humanity, trump

ட்ரம்பின் இந்த பேச்சு உலகளவில் பெரும் விவாதப்பொருளானது. இதனிடையே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா அனுமதி அளித்ததை அடுத்து இந்தியாவுக்கும் மோடிக்கும் இந்தியர்களுக்கும் ட்ரம்ப் நன்றி தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்த நெருக்கடியான சூழலில் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து விஷயத்தில் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவியை மறக்க மாட்டேன். இந்த போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், மனித குலத்துக்கே உதவும் வலுவான தலைமையான இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி”

என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த நன்றியை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா எப்போதும் உதவ தயாராக உள்ளதாகவும்  இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவு வலுவாகியுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.