மளிகை, காய்கறிகளில் 'வைரஸ்' பரவுமா?... பாதுகாப்பாக இருக்க 'இத' மட்டும் பண்ணுங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 09, 2020 02:54 AM

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது. எனினும் மளிகை, மருந்து, காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிட வீட்டுக்கு ஒருவர் வெளியில் செல்லலாம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

How to Protect Groceries, Vegetables from Virus Spread?

இந்த நிலையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் கொரோனா வைரஸ் பரவுமா? என்ற கேள்வி பலரது மனதிலும் தற்போது எழுந்துள்ளது. உண்மை என்னவெனில் இதுவரை அப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் உலக சுகாதார அமைப்பு சில பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க அறிவுறுத்துகிறது.

மளிகை பொருட்கள்

எனவே மளிகைக் கடைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்கள் அவற்றை பாதுகாப்பாகக் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.அதாவது அட்டைப் பெட்டிகளை தொடும் முன் கிளவுஸ் அணிந்து ஈரப்பதம் மிக்க வைப்ஸ் கொண்டு துடைத்துவிடுங்கள் அல்லது தொட்டவுடன் கைகளைக் எங்கும் தொடாமல் உடனே கழுவிவிடுங்கள் என்று கூறியுள்ளது.

வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்கி வந்தாலும் உடனே கைகளை கழுவுதல் அவசியம். தூக்கி எறிய முடிந்த அட்டை மற்றும் கவர்களையே வெளியிலேயே எறிந்துவிடலாம். கழுவ முடிந்த மளிகைப் பொருட்களை கழுவி எடுத்துவைக்கலாம். மளிகை பொருட்கள் வைக்கும் இடத்தையும் நன்கு சுத்தம் செய்துவிட்டு வைக்கவும். மளிகைப் பொருட்கள் வாங்கி வரும் பையை உடனே துவைத்து அலசுவது நல்லது. பிளாஸ்டிக் கவர் என்றால் எறிந்துவிடலாம்.

காய்கறி, பழங்கள்

வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 72 மணி நேரம் வெளியே வைத்துவிட்டு பின்னர் எடுத்துக்கொள்ளலாம். காய்கறி, பழங்களை வெளியிலேயே நன்கு தண்ணீரில் அலசிவிட்டு உள்ளே எடுத்துச் செல்லலாம். 15 நிமிடங்களுக்கு அவை அப்படியே தண்ணீரிலேயே ஊற வைத்தலும் நல்லது.

கீரை வகைகள்

கீரைகளை அலசும்போது அசுத்தமாக இருக்கும் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி மூழ்கும் அளவிற்கு ஊற வையுங்கள். சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பின் வேர்களில் மண் நீங்கும் வரை அலசி சுத்தம் செய்து அதன் பிறகு கீரையைக் கிள்ளி பயன்படுத்துங்கள்.

வேர் வகைக்காய்கள்

கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, முள்ளங்கி என வேர் வகைக் காய்களை வாங்கி வந்ததும் தண்ணீரில் நன்கு அலசி , ஓடும் தண்ணீரிலேயே பீலர் வைத்து தோலை சீவுங்கள். பின் மீண்டும் தண்ணீரில் மூழ்க வைத்து நறுக்கி சமைக்க பயன்படுத்துங்கள்.

காளான்

காளான் பயன்படுத்தினால் அவற்றை தண்ணீரில் நன்கு அலச முடியாது. இருப்பினும் இந்த சமயத்தில் சுத்தம் அவசியம். எனவே தண்ணீரில் ஒரு அலசு அலசி உடனே எடுத்துவிடுங்கள். பின் அதில் ஏதேனும் அழுக்கு இருந்தால் கைகளால் எடுத்துவிட்டு உடனே துணியில் பரப்பி உலர்த்தி எடுங்கள்.இவை தவிற பீன்ஸ் , அவரை, தக்காளி என மற்ற காய்கறிகளைக் கழுவும் போது வெது வெதுப்பான சுடு நீரில் அலசிப் பயன்படுத்துங்கள்.