'ஹைட்ராக்சிகுளோரோகுயின் எடுத்துக்கிட்டா நல்லது'...ஆனா இவங்க கண்டிப்பா சாப்பிட கூடாது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்? என்பது குறித்து டாக்டர் சுதா சேஷய்யன் விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்பது மலேரியா நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிற ஒரு மருந்து. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தியதால், நல்ல பலன் கிடைத்தது. இதனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்த மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்ற ஓப்புதலை வழங்கியது. கோவிட்-19 பணிக்குழும் இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு கொடுப்பதற்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே கொரோனா நோயாளிகளை தவிர்த்து, தீவிரமாக கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் டாக்டர், செவிலியர் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் இந்த மருந்தை எடுத்து கொள்ளலாம். அதே நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர்களோடு வீட்டில் இருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், அவர்களும், நோய் தடுப்பாக இந்த மருந்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், எனக்கு கொரோனா மாதிரி அறிகுறி இருக்கு, எனேவ நான் சாப்பிடுகிறேன் என யாரும் தயவு செய்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வாங்கி சாப்பிட வேண்டாம். இவை அனைத்தும் மருத்துவரின் பரிந்துரை மற்றும் மேற்பார்வையில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
மிக முக்கியமாக 15 வயதுக்கு உட்பட்டவர்கள், விழித்திரை கோளாறு உள்ளவர்கள், ஒவ்வாமை உள்ளவர்கள், வேறு ஏதாவது நாட்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் தடுப்புக்காகக்கூட இந்த மருந்தை பயன்படுத்தவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது, என டாக்டர் சுதா சேஷய்யன் விளக்கமளித்துள்ளார்.