'24 மணி நேரத்தில் சட்டெனெ கூடிய கவுண்ட்'... 'இந்தியாவில் 5734 பேர் பாதிப்பு'... இது தான் காரணமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 09, 2020 10:32 AM

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தும் நோய் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coronavirus cases in India jump to 5734 with 166 deaths

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை, பல மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 540 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 17 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 149ல் இருந்து 166 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 473 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 738 பேருக்கும், டெல்லியில் 669 பேருக்கும், தெலுங்கானாவில் 427 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தும் நோய் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக விலகலை மக்கள் இன்னும் தீவிரமாக கடைப்பிடிக்காததே இந்த உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே மக்கள் சமூக விலகலை இன்னும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.