'50 நிமிடத்தில்' கொரோனாவை கண்டறியும் 'கருவி...' ஒரு 'கருவி' மூலம் ஒரு நாளுக்கு '20 முடிவுகள்...' 'ஆயிரம் கருவிகள் தயார்...' 'தனியார் நிறுவனம் சாதனை...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 09, 2020 08:11 AM

ஆந்திராவில் தனியார் நிறுவனம் சார்பில், 50 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி தயாரிக்கப்பட்டு, முதல்வர் ஜெகன்மோகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Corona detection tool in 50 minutes -20 results per day

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பரிசோதனை  முடிவுகள் வருவதற்கு இரண்டு நாட்கள் வரை ஆகிறது. மேலும் வைரஸ் பரிசோதனைக்கு ஒருவருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை செலவாகிறது.

இந்நிலையில் குறைந்த செலவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டிறியும் பரிசோதனை கருவியை தயார் செய்வதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தனியார் நிறுவனம் சார்பில் கொரோனா பரிசோதனை கருவி  தயார் செய்யப்பட்டது.

இந்நிலையில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தொழில்துறை அமைச்சர் கவுதம், நேற்று தனியார் நிறுவனம் சார்பில் தயாரித்த கொரோனா பரிசோதனை கருவியை வழங்கி அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்த கருவியை பயன்படுத்தி, ஒவ்வொரு 50 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக ஒரு கருவியில் ஒரு நாளுக்கு 20 முடிவுகள் வரை தெரிந்து கொள்ளலாம்.

தற்போது தனியார் நிறுவனம் சார்பில் ஆயிரம் கருவிகள் தயாரிக்கப்பட்டு மாநில சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் 10 ஆயிரம் மருத்துவ பரிசோதனை கருவிகள் தயாரிக்கப்பட்டு மாநில சுகாதாரத் துறைக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கவுதம் தெரிவித்துள்ளார்.