‘அவர்களை பற்றி அப்படி சொல்வது சரியில்ல’... ‘பாகிஸ்தான் கேப்டன் கூறும் காரணம்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 08, 2019 12:15 PM

இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்கவில்லை என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கருத்து தெரிவித்துள்ளார்.

Sarfaraz says let\'s not say that India lost on purpose against England

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிப்பெற்றுவந்தாலும், கடந்த ஜூன் 30-ந் தேதி நடந்த லீக் ஆட்டத்தில், இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை சிதைக்கும் வகையில் இந்திய அணி வேண்டுமென்றே இந்த ஆட்டத்தில் தோற்றதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கருத்து கூறி வந்தனர். 

இந்நிலையில் இது குறித்து நாடு திரும்பியுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ‘நாங்கள் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கக்கூடாது என்பதற்காக, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதாக நான் நினைக்கவில்லை. அப்படி சொல்வது சரியானது அல்ல. இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது’ என்று தெரிவித்தார்.