'யாருயா அவரு?' .. '606 ரன்கள்.. 11 விக்கெட்ஸ்' .. உலகக்கோப்பை 2019-ன் அதிவேகப் புயலாக மாறிய அதிரடி வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jul 05, 2019 11:02 PM

பரபரப்பான கட்டத்தில் வங்கதேசத்துக்கும பாகிஸ்தானுக்குமான பலப்பரீட்சை தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது.

606 runs, 11 wickets in CWC19, Bangladesh Shakib Al Hasan

50 ஓவர்கள் முடிவில், 315 ரனகள் எடுத்த பாகிஸ்தான் அணி , வங்கதேசத்துக்கு 316 ரன்கள் என்கிற இலக்கை நிர்ணயித்தது. அடுத்தடுத்து ஆடிய வங்கதேச பேட்ஸ்மேன்களின் ஒவ்வொரு நகர்வையும் நெருக்கமாக கவனித்துக்கொண்ட பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றவும் தவறவில்லை.

அதிலும் ஷாகின் அஃரிடியின் அபாரமான டெலிவரியும், அட்டகாசமான ஃபீல்டிங்கும் அடுத்தடுத்து வங்கதேச வீரர்களின் விக்கெட்டுகளைக் கைப்பற்ற உதவியது. இந்த நிலையில், வங்கதேச அணியின் 24 வயது இளம் புயல், ஷாகிப் அலி ஹாசன், 2019 உலகக் கோப்பை போட்டியில் தனது 5வது அரை சதத்தை 62 பந்துகளில் நிறைவு செய்தார்.

2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில், அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்கிற பெருமையை 606 ரன்கள் எடுத்து, நிலைநிறுத்தியுள்ளார். இது அவருக்கு 47வது ஒருநாள் போட்டி என்பதும் இதில் இவர் மொத்தமாக 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியில் 64 ரன்கள் எடுத்த நிலையில், ஷாகிப் அலி ஹாசனின் விக்கெட்டையும் ஷாகின் அஃப்ரிடி கைப்பற்றினார்.