'கொஞ்ச நேரம் கேப் இருந்தா போதும்'... 'நம்ம சின்னராச கையிலேயே புடிக்க முடியாது'... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Jul 06, 2019 11:37 AM
இங்கிலாந்து கால்பந்து வீரருடன் இந்திய கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் ஆடும் வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணியினை எதிர்கொள்கிறது. அரையிறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், நான்கு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனிடையே பயிற்சியில் நடுவில் இங்கிலாந்து தேசிய கால்பந்து அணியைச் சேர்ந்த கால்பந்து வீரரான ஹாரி கேனை கேப்டன் விராட் கோலி சந்தித்துள்ளார். இதையடுத்து இருவரும் கிரிக்கெட் ஆடி மகிழ்துள்ளார்கள். ஹாரி கேனை சந்தித்த கோலி, பயிற்சியின் போது உடற்பயிற்சிக்காக கிரிக்கெட் வீரர்கள் கால்பந்து விளையாடுவது வழக்கம். ஆனால் எந்தக் கால்பந்து வீரரும் கிரிக்கெட் விளையாடுவதில்லை என கிண்டலாக தெரிவித்தார். இருப்பினும் எனக்கு கால்பந்து விளையாடுவது மிகவும் பிடித்த ஒன்று என குறிப்பிட்டார்.
இதனிடையே கோலிஉடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள ஹாரி '' விராட் கோலியுடன் மகிழ்ச்சிகரமாக நேரத்தை செலவிட்டேன். இங்கிலாந்து அணியுடன் விளையாடாத வரை கோலிக்கும் அவரது அணிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இருவரும் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
