'மொத்த கனவும் நொறுங்கியது'... 300க்கும் மேல ரன் எடுத்தாலும்.. பாகிஸ்தானின் பரிதாப நிலை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jul 05, 2019 10:10 PM
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன.

இந்த நிலையில், இன்று லண்டனில் நிகழும் 43வது உலகக் கோப்பை லீக் போட்டியில், வங்கதேசத்துடன் மோதும் பாகிஸ்ஹான் அணி முதலில் பேட் செய்து, 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் அடித்துள்ளது. ஆனாலும் கூட, அரையிறுதிக்கு முன்னேற முடியாத அபாயகட்டத்தில் பாகிஸ்தான் அணி சிக்கியுள்ளது.
முன்னதாக இந்தியாவுடன் மோதி, 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவையும், நியூஸிலாந்துடன் மோதிய போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தையும் வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழையும் 3வது அணியாக நியூஸிலாந்து தகுதி பெற்றது. இதனையடுத்து பாகிஸ்தானுடன் மோதிய நியூஸிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி, 4வது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், வங்கதேசத்துடன் பலப்பரீட்சையில் மோதும் பாகிஸ்தான் அணி, 300க்கும் மேல் ரன்கள் குவித்தாலும், அரையிறுதிக்குள் நுழைய, தகுதி பெற முடியாது என்கிற சூழலில் உள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணியின் கைகளில் இருந்தது.
ஆனால் இங்கிலாந்து அணி மேற்கண்ட 2 அணிகளையும் வெற்றிகொண்டதால், பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை பாகிஸ்தான் விளையாண்ட 8 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று, 3ல் தோல்வி அடைந்து 9 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
