‘எந்த பக்கம் அடிச்சாலும் ‘தல’ கிட்ட தப்ப முடியாது’.. ‘அடுத்தடுத்து 3 கேட்ச்’.. மிரண்டு போன ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 06, 2019 04:08 PM

இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

India make 2 big changes in playing XI vs Sri Lanka

உலகக்கோப்பை லீக் சுற்றின் 44 -வது போட்டி நேற்று(06.07.2019) ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகள் மோதின. இந்திய அணியை பொறுத்தவரை இரண்டு முக்கிய மாற்றங்களை செய்தது. அதில் காயம் ஏற்படும் வீரர்களுக்கு பதிலாக அவ்வப்போது விளையாடி வந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார். அதனால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வெளியே அமர்த்தப்பட்டார். மேலும் சுழற்பந்து வீச்சாளர் சஹாலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற்றார்.

இந்நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 264 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மேத்யூஸ் சதமும்(113), திரிமன்னே அரைசதமும்(53) அடித்தனர். இந்திய அணியில் பும்ரா 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, புவனேஷ்வர்குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதில் இந்திய அணி எடுத்த முதல் மூன்று விக்கெட்டுகளும் தோனி கேட்ச் பிடித்து அவுட் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 265 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா(103) மற்றும் கே.எல்.ராகுல்(111) ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இந்நிலையில் ஜூலை 9 -ம் தேதி நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.

Tags : #ICCWORLDCUP2019 #CSK #RAVINDRA JADEJA #MSDHONI #INDVSL #TEAMINDIA #CWC19 #SLVIND #HAPPYBIRTHDAYDHONI