TOP 4: 'செமி ஃபைனலுக்கு போகப்போறது இந்த 4 டீம்தான்... ஆனா' ... சூடு பிடிக்கும் உலகக்கோப்பை களம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jul 05, 2019 11:46 PM
கடந்த மே மாதம் 30-ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை போட்டிகள் 48 லீக் போட்டிகளாக, ஜுலை 14-ஆம் தேதி வரை நடைபெறும் என்று முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இங்கிலாந்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணி, தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. ஒவ்வொரு அணியும் தலா 1 முறை பிற அணியுடன் மோதுமாறு அமைக்கப்பட்டுள்ள இந்த லீக் ஆட்டத்தில், மொத்தம் 9 ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் விளையாண்டன.
இதில் முதல் 4 இடங்களைப் பிடித்துள்ள ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. இனி இந்த அணிகளுள் நாக்-அவுட் முறையில் ஃபைனலுக்கு தேர்வாகும் இரண்டு அணிகள் வரும் ஜூனை 14-ஆம் தேதி, லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் மோதவுள்ளன.
எனவே, 46வது மற்றும் 47வது லீக் ஆட்டங்களான அரையிறுதிப் போட்டியில், எந்த அணியுடம் எந்த அணி மோத உள்ளது என்பதுதான் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே இலங்கை அணியுடன் இந்திய அணியும் (ஜூலை 06, மதியம் 3 மணி), ஆஸ்திரேலிய அணியுடன் தென் ஆப்பிரிக்க அணியும் (ஜூலை 06, மாலை 6 மணி) மோதவுள்ளன.