'இந்த 2 அணிகள் தான் ஃபைனலில் மோதும்'... 'தென் ஆப்ரிக்கா வீரர் கணிப்பு'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 07, 2019 07:28 PM

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் என தான் நினைப்பதாக தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டூ பிளசிஸ் கூறியுள்ளார்.

Captain du Plessis predicts an India-England World Cup final

உலகக் கோப்பை தொடரில் கடந்த சனிக்கிழமை நடந்த கடைசி லீக் போட்டியில், ஆஸ்திரேலியா- தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. இதில், தென் ஆப்ரிக்க அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு பேட்டியளித்த தென் ஆப்ரிக்கா கேப்டன் டூ பிளசிஸ், ‘இந்த தொடர் எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்க கூடியதாக இருந்தது. இருப்பினும் கடைசி 2 போட்டிகளில் தவறை திருத்திக் கொண்டு, வெற்றி பாதைக்குத் திரும்பியது சற்று ஆறுதல் தரும் விதமாக இருந்தது.

இன்றையப் போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றது, எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ, இல்லையோ இந்திய அணிக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும். கடந்த 2, 3 போட்டிகளில் நியூசிலாந்து அணியின் நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது. இதனால், இந்திய அணியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என நான் கருதுகிறேன். அதேபோல், சொந்த மைதானத்தின் சாதகத்துடன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குச் செல்லும். இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் ஆடும் என்பது என் தனிப்பட்ட கணிப்பு’ என்றார்.