"இப்படியா ஃபீல்டிங் பண்றது".. ஷமி செஞ்ச தப்பு.. ஆவேசத்தில் கத்திய கேப்டன் ரோஹித்!!.. பரபரப்பு சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது அரை இறுதி போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
Also Read | T 20 World Cup 2022 : கேப்டன்கள் எடுத்த செல்ஃபி.. Semi Finals வர டீம் பத்தி அப்பவே இருந்த 'செம' கனெக்ஷன்!!
இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இரண்டாவது அரை இறுதி போட்டியில் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிதானமாகவே ரன் சேர்த்தது. இதனால், பெரிய அளவில் ரன் வருமா என்றும் கேள்வி இருந்தது. ஆனால், கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி ரன் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி.
இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடி ரன் சேர்த்தனர். இதன் காரணமாக, 16 ஓவர்களில் இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. ஜோஸ் பட்லர் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களும் எடுத்து அசத்தி இருந்தனர்.
இறுதி போட்டிக்கு இங்கிலாந்து அணி முன்னேறி உள்ளதால், நவம்பர் 13 ஆம் தேதியன்று நடக்க உள்ள டி 20 உலக கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியையும் அவர்கள் சந்திக்க உள்ளனர். ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்திய அணி தோல்வி அடைந்ததால் ரசிகர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், சோஷியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முகமது ஷமியின் செயலால் ரோஹித் ஷர்மா கோபப்பட்ட விஷயம் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை ஸ்கூப் ஷாட்டாக அடித்திருந்தார் அலெக்ஸ் ஹேல்ஸ். கீப்பர் பின்னால் இந்த பந்து வேகமாக போக அப்பகுதியில் ஃபீல்டிங் நின்ற முகமது ஷமி, பந்தை பவுண்டரி செல்லாமல் தடுத்தார். தொடர்ந்து பந்தை கீப்பர் கைக்கு வீசாமல், தனது அருகே ஓடி வந்த புவனேஷ்வர் கையில் வீசினார். அவரும் பந்தை பிடிக்காமல் தவற விட, இதற்குள் வேகமாக நான்கு ரன்களை பட்லர் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் ஓடி எடுத்தனர். 2 ரன்னில் முடிய வேண்டிய விஷயத்தை தவறுதலாக ஃபீல்டிங் செய்து நான்கு ரன்களாக ஷமி மாற்றி இருந்தார்.
ஏற்கனவே அதிரடியாக இங்கிலாந்து அணி ஆடி கொண்டிருக்க, பீல்டிங்கில் இப்படி ஒரு தவறை செய்ததால் இதனைக் கண்டதும் பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியாவின் முகமே மாறி போனது. அதே போல, கேப்டன் ரோஹித் ஷர்மாவும் கோபத்தில் சில வார்த்தைகளையும் கத்திய படி பேசி இருந்தார். தோல்விக்கு மத்தியில் இப்படி ஒரு தவறை இந்திய வீரர்கள் செய்த விஷயம், ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.