T 20 WORLD CUP 2022 : "அவங்களுக்கு எதுவும் ஆயிடக் கூடாது".. பவுலர்களுக்காக டிராவிட், ரோஹித், கோலி எடுத்த முடிவு.. நெகிழ்ந்த ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இதற்கு முன்பாக சூப்பர் 12 சுற்று நடைபெற்றிருந்த நிலையில் இதிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன் முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் சிட்னி மைதானத்தில் 09.11.2022 அன்று மோத உள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது அரை இறுதியில் நாளை மறுதினம் 10.11.2022 அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த டி 20 உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்த இந்திய அணி இந்த முறை நிச்சயமாக டி20 உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். அப்படி ஒரு சூழ்நிலையில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதால் இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக மைதானத்திற்கு வருவதற்கு முன்பாக விமானத்தில் இந்திய வீரர்கள் பயணம் செய்த போது நடந்த சம்பவம் தொடர்பாக வெளியாகி உள்ள தகவல் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
ஐசிசி விதிமுறைகளின் படி ஒவ்வொரு அணிக்கும் விமானத்தில் நான்கு பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான அணிகள் இந்த சலுகையை தங்கள் பயிற்சியாளர், கேப்டன், துணை கேப்டன் அல்லது சீனியர் வீரர் போன்றவர்களுக்கு வழங்குவார்கள் என்றும் தெரிகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் ஷர்மா, வீரர் விராட் கோலி உள்ளிட்டோர் தங்களின் இருக்கைகளை இந்திய அணி பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மெல்போர்னில் இருந்து அடிலெய்ட் வரை விமான பயண நேரம் ஒன்றரை மணி நேரமாக இருக்கும். இதனால், பந்து வீச்சாளர்கள் கால் வலி மற்றும் முதுகு வலியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவர்கள் கால் நீட்டி வசதியாக அவர்கள் அமர்வதற்காக டிராவிட், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் தங்களின் பிசினஸ் இருக்கைகளை வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.