"அவர போய் சாதாரணமா நெனைச்சிங்க... அதான் உங்கள மொத்தமா 'காலி' பண்ணிட்டாரு..." 'ஆஸ்திரேலிய' அணியின் தவறை சுட்டிக் காட்டிய 'ரிக்கி பாண்டிங்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் இன்று முடிவடைந்தது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி, மேற்கொண்டு 11 ரன்கள் சேர்பதற்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய 244 ரன்கள் குவித்த நிலையில், தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளை பும்ரா சாய்த்தார்.
அதன் பிறகு, பந்து வீச வந்த அஸ்வின், ஸ்மித் உட்பட 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. பகலிரவு போட்டிகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய அணி, இந்த முறை இந்திய அணியை விட 53 ரன்கள் பின்தங்கியிருந்தது.
அது மட்டுமில்லாமல், கிட்டத்தட்ட 50 இன்னிங்ஸ்களுக்கு பிறகு ஸ்மித் மிகக் குறைந்த ரன்னில் (1 ரன்) ஆட்டமிழந்தார். அதற்கு முக்கிய காரணம் அஸ்வின் பந்து வீச்சு தான். இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், 'ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் அஸ்வின் ஓவரில் ஆக்ரோஷமாக ஆடி ரன் குவிக்க எண்ணினர். அது மட்டுமில்லாமல் அஸ்வினை அவர்கள் குறைத்து மதிப்பிட்டனர். ஆனால், அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார். ரன் அடிக்க ஆசைப்பட்டு செய்யக் கூடாத செயலை அஸ்வினுக்கு எதிரான ஓவரில் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்தனர்' என அஸ்வினின் பந்து வீச்சை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
