"இப்டி ஒரு 'வாய்ப்பு' திரும்ப கெடைக்குமா??..." 'கோலி' குடுத்த லட்டு 'சான்ஸ்'... தவற விட்டு 'ஃபீல்' பண்ணிய ஆஸ்திரேலிய 'அணி'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக இந்திய கேப்டன் கோலி 74 ரன்களும், புஜாரா 43 ரன்களும், ரஹானே 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அஸ்வின் 15 ரன்களுடனும், சஹா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மிகவும் நிதானமாக இந்திய அணி வீரர்கள் முதல் நாளில் ஆடிய நிலையில், கோலி களத்தில் அதிகம் நேரம் நின்றதால் ஆஸ்திரேலியா அணிக்கு சற்று நெருக்கடி இருந்தது.
இதனையடுத்து, அவர் தேவையே இல்லாமல் ரன் ஓட முயற்சி செய்து ரன் அவுட் ஆனார். ஆனாலும், அதற்கு முன்பாகவே கோலி ஆட்டமிழந்தும் நடுவரின் முடிவால் அவர் தப்பியிருந்தார். முதல் நாளின் 35 ஆவது ஓவரை ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் வீசிய போது அதனை எதிர்கொண்ட கோலியின் பேட்டில் பந்து சரியாக படாமல் கீப்பர் மற்றும் ஆஸ்திரேலியா கேப்டனான டிம் பெயின் கைக்கு சென்றது.
டிம் பெயின் அவுட் கேட்டு அப்பீல் செய்ய, போட்டி நடுவர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார். டிஆர்எஸ் வாய்ப்பு இருந்த போதும் அதனை பயன்படுத்திக் கொள்ளாத ஆஸ்திரேலியா அணி, நடுவரின் முடிவையே ஏற்றுக் கொண்டது. ஆனால், ரீப்ளேயில் கோலி அவுட் என்பது தெரிய வந்தது. கையில் 3 டிஆர்எஸ் வாய்ப்பு இருந்த போதும் அதனை ஆஸ்திரேலியா பயன்படுத்தி கோலியை ஆட்டமிழக்கச் செய்யாமல் பொன்னான வாய்ப்பை தவற விட்டது.
அதன்பிறகு நிதானமாக ஆடிய கோலி அரை சதமடித்திருந்தார். ஒருவேளை, கோலியை டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்ய வைத்து ஆட்டமிழக்க செய்திருந்தால் இந்திய அணியை இன்னும் நெருக்கடிக்குள் ஆக்கியிருக்கும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி பெற்றிருக்கலாம். ஆனால், அதனை ஆஸ்திரேலிய அணி இழந்தது.