‘இது சச்சினா இல்ல இம்ரான் கானா..?’ பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு.. மீம்ஸ்களைத் தெறிக்க விட்ட ரசிகர்கள்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 23, 2019 12:49 AM

பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர் இம்ரான் கான் என சச்சினின் இளம் வயது புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

Pakistan PMs assistant gets trolled for sharing Sachins picture

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர். அவரது உதவியாளர் நயிம் உல் ஹக் பதிவிட்டுள்ள ட்வீட்டில் பிரதமர் இம்ரான் கான் என சச்சின் டெண்டுல்கரின் இளம்வயது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் பிரதமர் இம்ரான் கான் 1969 எனக் குறிப்பிட்டுள்ள அவர் இந்தப் பதிவிற்காக ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

அவருடைய ட்வீட்டைக் கிண்டல் செய்யும் விதமாக கோலியின் சிறுவயது புகைப்படத்தைப் பகிர்ந்து 1976வது வருடத்தில் இன்சமாம் உல் ஹக் எனவும், ஒரு சிறு குழந்தை கொட்டாவி விடும் புகைப்படத்தைப் பகிர்ந்து 1987வது வருடத்தில் சர்பராஸ் அகமது எனவும் ரசிகர்கள் இஷ்டத்திற்குப் பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tags : #INDVSPAK #SACHINTENDULKAR #IMRANKHAN