‘1 ரன்ல அவுட்டான என்ன’.. சச்சினுக்கு அடுத்து ‘தல’ படைத்த புதிய சாதனை!.. கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 17, 2019 09:56 AM

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடியதன் மூலம் தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

MS Dhoni becomes 2nd most capped ODI cricketer for India

உலகக்கோப்பை லீக் சுற்றின் 22 -வது நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான, ரோஹித் ஷர்மா(140), விராட் கோலி(77), கே.எல்.ராகுல்(57) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் நேற்றைய போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி 1 ரன்னில் அவுட்டானது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஹர்திக் பாண்ட்யா அவுட்டான பின்னர் களமிறங்கிய தோனி, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீரின் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முகமது அமீர் இந்திய அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை(விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, தோனி) வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடியதன் மூலம் அதிக ஒருநாள்(341) போட்டியில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். இதில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் 463 போட்டிகளில் விளையாடி முதல் இடத்தில் உள்ளார். இதற்கு முன்னர் 340 போட்டிகளில் விளையாடி ராகுல் டிராவிட் இரண்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #INDVPAK #TEAMINDIA #SACHINTENDULKAR