'டி20 டைப்ல விக்கெட் எடு.. முடிஞ்சா மிட் ஆஃப்ல மோத சொல்லு', வீரருக்கு சச்சினின் வைரல் டிப்ஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 31, 2019 05:21 PM

நடந்து வரும் உலகக் கோப்பை போட்டியில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் கலந்துகொண்ட சச்சின், கூறியுள்ள கருத்துக்கள் ரசிகர்களிடையே மட்டுமல்லாது வீரர்களிடையேவும் உற்சாகமூட்டியுள்ளது.

Sachin Tendulkars Tips for Rashid Khan ICC Cricket WorldCup2019

இந்த வர்ணனையில் இந்திய வர்ணனையாளர்கள் யாரும் ஆட்ட நுணுக்கங்களை சரிவர பேசவில்லை என்று ஆதங்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், அஷீத் கானின் ஆட்டத்தைப் பற்றி நுணுக்கமாக பேசியதோடு, அவருக்கு, மாஸ்டர் பிளாட்ஸ்மேன் சில ஷார்ப்பான அறிவுரைகளையும் டிப்ஸாக வழங்கியது பலரையும் கவர்ந்தது.

ஆப்கான் லெக் ஸ்பின்னரான ரஷீத் கான் உலகக் கோப்பையில் எதிர்பாராத அதிர்ச்சிகளைத் தரவல்ல வீரர் என்பதால் அவரைப் பார்த்து,  ‘டி20யைப் போலவே ஒருநாள் போட்டியிலும் உன்னால் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியும் என நான் நம்புகிறேன். அதனால் டெஸ்ட் போட்டியையும் ஒரு நாள் போட்டியைப் போலவே அணுகு’ என்று கூறியுள்ளார்.

இந்த அபாரமான டிப்ஸ்களுக்கெல்லாம் ஒருபடி மேல போன மாஸ்டர், ‘உன் ஸ்பின் பௌலிங்குகளை பேட்ஸ்மேன் எளிதாக புரிந்துகொள்ள முடியாத வகையில் திக்குமுக்காடச் செய், அவ்வாறு செய்வதால், இன்னும் தைரியமாக ஃபீல்டர்களை நெருக்கமாக அமைத்து மிட் ஆன், மிட் ஆஃபில் கூட முடிந்தால் அடி என்று பேட்ஸ்மேனுக்கு சவால் விடலாம்’ என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.

இதேபோல் டீப் மிட்வெக்கெட்டும் இந்த சீசனில் தேவைப்படும் என்பதால் அதையும் செய்யக்கூடிய திறன் ரஷீத் கானிடம் உள்ளதாகவும், ரசிகர்களை நிச்சயம் அவர் ஏமாற்றப்போவதில்லை என்றும் கூறியுள்ளார் சச்சின்.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #WORLDCUPINENGLAND #SACHINTENDULKAR #RASHID KHAN