'என்னா பௌலிங்! ஸ்டம்புகளை காலிசெய்த பந்துவீச்சு'... 'இங்கிலாந்தில் கெத்துகாட்டிய இந்திய வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 19, 2019 10:29 AM

வேகப்பந்து வீச்சில் தெறிக்கவிட்ட அர்ஜூன் டெண்டுல்கர் எடுத்த விக்கெட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Arjun Tendulkar Proves His Mettle With Barbaric Delivery

கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். அவரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இடது கைபேட்டிங், இடதுகை வேகப்பந்து வீச்சாளராக அவர் உள்ளார். கடந்த ஆண்டு இவர் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம் பெற்றார்.

தற்போது எம்.சி.சி யங் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள அர்ஜூன் டெண்டுல்கர், இங்கிலாந்தின் சர்ரே கவுண்டி அணிக்கு எதிராக இங்கிலாந்தில் விளையாடி வருகிறார். இந்தப் போட்டியில் அவர் வீசிய பந்துவீச்சில் சிக்கி, சர்ரே கவுண்டி அணி தொடக்க ஆட்டக்காரரான நாதன் தில்லே க்ளின் போல்ட் ஆவார். இந்த வீடியோவை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

இந்தப் பதிவை பார்த்த பலர் அர்ஜூன் டெண்டுல்கரின் அபாரமான பந்துவீச்சை பாராட்டி வருகின்றனர். இந்தப் போட்டியில் 11 ஓவர்கள் வீசிய அர்ஜூன் டெண்டுல்கர், 50 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

Tags : #SACHINTENDULKAR #ARJUNTENDULKAR #ENGLAND