சச்சின்..! சச்சின்..! உலகக்கோப்பையில் மீண்டும் ஒலிக்க போகும் குரல்..! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 30, 2019 01:36 PM

உலகக்கோப்பைத் தொடரில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் முக்கிய பங்கு வகிக்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

Sachin Tendulkar will make his debut as a commentator during the WC

உலகக்கோப்பைத் தொடர் இன்று(30.05.2019) இங்கிலாந்தில் கோலகலமாக தொடங்க உள்ளது. இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் போட்டி தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து ராணியின் மாளிகையில் கிரிக்கெட் கேப்டன் அனைவருக்கும் விருந்து உபசரிக்கப்பட்டது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகக்கோப்பையின் முதல் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் உலகக்கோப்பை வர்ணணையாளராக பங்கு பெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு பல்வேறு போட்டிகளில் சச்சின் வர்ணணையாளராக பேசியிருந்தாலும், தொழில்முறை வர்ணணையாளராக இப்போதுதான் முதல்முறையாக பங்கேற்க உள்ளார். கடந்த 2011 -ம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்ற பிறகு கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றார். தற்போது மீண்டும் வர்ணணையாளராக கிரிக்கெட்டில் பங்கேற்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

Tags : #ICCWORLDCUP2019 #SACHINTENDULKAR