‘நானா இருந்தாலும் இதயே தான் பண்ணியிருப்பேன்..’ பாகிஸ்தான் அணி பற்றிப் பேசிய விராட் கோலி..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 17, 2019 12:25 PM

உலகக் கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் நடந்து முடிந்துள்ளது.

IND vs PAK we wanted to bowl first says Virat Kohli

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா (140), விராட் கோலி (77), கே.எல்.ராகுல் (57) சிறப்பாக விளையாடினர். 337 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

வெற்றிக்குப் பின் பேசிய கோலி, “இந்த பிட்ச் எந்த வித்தியாசத்தையும் தரவில்லை. டாஸ் வென்றிருந்தால் நானும் முதலில் பந்துவீச்சைத் தான் தேர்வு செய்திருப்பேன். இந்த பிட்சில் இரண்டாம் பாதியில்தான் பந்து நன்றாகத் திரும்பியது. சரியான பகுதியில் பந்து வீசியிருந்தால் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க முடியும். கடைசி போட்டியில் ரோஹித் சர்மா தனியாக நின்று வெற்றி பெற வைத்தார். இந்தப் போட்டியில் அவரும் ராகுலும் தாங்கள் சிறந்த வீரர்கள் என நிரூபித்துவிட்டார்கள். குல்தீப் யாதவ் புத்திசாலித்தனமாக பந்து வீசி பாபர் அஸாமை ஆட்டமிழக்கச் செய்தார். உலகக் கோப்பையில் இதுதான் அவரது சிறப்பான பந்துவீச்சு” எனக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணி பற்றிப் பேசிய விராட், “சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இந்தப் போட்டியில் உணர்ச்சிவசப்பட்டு விளையாடினால் தவறாகப் போய்விடும். அந்தப் பார்வையோடு நாங்கள்  அவர்களை அணுக மாட்டோம். விளையாட்டை விளையாட்டாகவே பார்த்ததால்தான் வெல்ல முடிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #VIRATKOHLI #INDVSPAK