'104 குழந்தைகள்' இறந்து போச்சு'... 'கூட்டத்துல கேக்குற கேள்வியா' இது?... அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 18, 2019 11:17 AM

பீகாரில் குழந்தைகள் இறந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது.இது தொடர்பாக விவாதிக்க மத்திய அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில்,அமைச்சர் கேட்ட கேள்வி பலரையும் அதிர வைத்துள்ளது.

Health Minister Mangal Pandey was heard at a meeting asking for score

இந்த சம்பவம் தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.அதில் 'பீகாரில் அதிகரித்து வரும் குழந்தைகள் இறப்பு குறித்து விவாதிப்பதற்காக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே உள்ளிட்ட மாநில சுகாதாரத் துறையினை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனிடையே கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது தான்,இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது பாகிஸ்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்தது.அந்த நேரத்தில் அமைச்சர் மங்கள் பாண்டே அங்கிருந்தவர்களிடம் “எத்தனை விக்கெட் போச்சு” என கேள்வி எழுப்பினார். அதற்கு ஒருவர் நான்கு என பதிலும் அளித்தார். பீகாரில் இதுவரை 104 குழந்தைகள் வரை மரணம் அடைந்திருக்கிறது.ஆனால் அதற்கு முறையான நடவடிக்கை இல்லை,என்ற குற்றசாட்டு நிலவும் நிலையில்,முக்கிய கூடத்தில் அமைச்சர் நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதனிடையே கிரிக்கெட்டில் காட்டும் ஆர்வத்தை,அமைச்சர் முறையான மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதில் காட்ட வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Tags : #CRICKET #ICCWORLDCUP2019 #BIHAR #ENCEPHALITIS #UNION HEALTH MINISTER HARSH VARDHAN #ASHWINI KUMAR CHOUBEY #INDVSPAK