‘இப்போ இந்தியாதான் பெஸ்ட் டீம்..’ புகழ்ந்துதள்ளிய பாகிஸ்தான் வீரர்கள்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 17, 2019 02:14 PM

உலகக் கோப்பை போட்டியில் 7வது முறையாக தொடர்ந்து பாகிஸ்தானை வென்று சாதனை வரலாற்றைத் தக்கவைத்துள்ளது இந்திய அணி.

pakistan players praise indian teams perfomance in worldcup

ரோஹித், கோலி, ராகுல் ஆகியோரின் அதிரடி ஆட்டம், குல்தீப் மற்றும் பாண்ட்யா எடுத்த அசத்தல் விக்கெட்டுகள் ஆகியவற்றால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக வெற்றிபெற்றுள்ளது.  இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஷாகித் அஃப்ரிடி, “தகுதியான வெற்றியைப் பெற்ற பிசிசிஐக்கு வாழ்த்துக்கள். கிரிக்கெட் விளையாடும் திறன் வழக்கத்துக்கு உயர்ந்துள்ளது. இதற்கான அனைத்து புகழும் ஐபிஎல் அமைப்புக்கே செல்லும். ஐபிஎல் இளம் வீரர்களைக் கண்டறிய மட்டும் உதவவில்லை. நெருக்கடியான நேரத்தில் இளம் வீரர்களுக்கு அழுத்ததைக் கையாளவும் கற்றுக் கொடுத்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

போட்டிக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது, “1990களில் இந்தியாவை விட பாகிஸ்தான்தான் சிறந்த அணியாக இருந்தோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அதிக அழுத்தம் நிறைந்ததாக உள்ளது. இதில் வீரர்களுக்குத்தான் அதிக அழுத்தம் இருக்கிறது. அதை மிகச் சரியாகக் கையாளும் அணியே வெற்றி பெறுகிறது.  இப்போது நிலைமை மாறி எங்களைக் காட்டிலும் இந்தியாதான் சிறந்த அணியாக உள்ளது” என இந்திய அணியைப் புகழ்ந்துள்ளார்.

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #INDVSPAK