‘இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடித் தீர்த்த ஸிவா தோனி..’ வைரலாகும் வீடியோ..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 17, 2019 03:30 PM

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.

viral video Ziva dhoni celebrates indias victory with Rishab Pant

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. 337 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரோஹித், கோலி, ராகுல் ஆகியோரின் அதிரடி ஆட்டம், குல்தீப் மற்றும் பாண்ட்யா எடுத்த அசத்தல் விக்கெட்டுகள் ஆகியவற்றால் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

போட்டியின்போது பார்வையாளர் அரங்கிலிருந்த தோனியின் மகள் ஸிவா இந்திய அணியின் இளம்வீரர் ரிஷப் பண்ட்டுடன் சேர்ந்து ஆட்டத்தைப் பார்த்தார். இந்தியா வெற்றி பெற்ற மகிழ்ச்சியை இருவரும் சேர்ந்து உரக்கக் கத்திக் கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி அனைவரையும் கவர்ந்து வருகிறது.

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Partners in crime 😈 @ziva_singh_dhoni

A post shared by Rishabh Pant (@rishabpant) on

 

Tags : #ICCWORLDCUP2019 #INDVSPAK #ZIVADHONI