‘நாங்க எல்லாம் அப்போலிருந்தே இப்படி தான்..’ வைரலாகும் விராட் கோலியின் சிறுவயது ஃபோட்டோ..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 18, 2019 12:10 PM

விராட் கோலியின் சிறுவயது புகைப்படம் ஒன்று அவருடைய தற்போதைய புகைப்படத்துடன் ஒப்பிட்டு வைரலாகப் பரவி வருகிறது.

Doing it since early 90s Virat kohlis childhood photo goes viral

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் அதிரடியாக விளையாடி அபார வெற்றி பெற்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் மழை தூறும் போது விராட் கோலி இடுப்பில் கை வைத்தபடி வானத்தைப் பார்த்தவாறு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவியது.

இந்தப் புகைப்படத்தில் இருப்பதுபோலவே விராட் கோலி உள்ள சிறுவயது புகைப்படம் ஒன்றும் இணையத்தில் பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில்  இந்த இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதைப் பார்த்த விராட் கோலி அந்தப் புகைப்படத்தைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில்,  90களின் தொடக்கத்திலிருந்து இதை செய்துகொண்டிருப்பதாக நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார். வைரலாகி வரும் இந்தப் புகைப்படத்தை வைத்து பல மீம்களும் தற்போது பரவி வருகிறது.

 

 

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #INDVSPAK #VIRATKOHLI