‘கையெடுத்து கும்பிடுறேன் தயவு செஞ்சு ஒழுங்கா..!’.. போட்டியின் நடுவே அம்பயரால் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 23, 2019 12:02 AM
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அம்பயரிடம் முறையிடும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியா-ஆஃப்கானிஸ்தானுக்கு இடையே உலகக்கோப்பை போட்டி இன்று சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி அடைந்தது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 67 ரன்களும், கேதர் ஜாதவ் 52 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் கடைசி ஓவரில் 11 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த ஆஃப்கானிஸ்தான் அணி இருந்தது. அப்போது கடைசி ஓவரை விசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து ஆஃப்கானிஸ்தானை ஆல் அவுட் செய்தார்.
இந்நிலையில் இப்போட்டியின் 3 -வது ஓவரை முகமது ஷமி வீசினார். அதில் 4 -வது பந்தை எதிர்கொண்ட ஆஃப்கான் வீரர் ஸ்ஸாயின் கால் பேடில் பந்து பட்டுச் சென்றது. இதனால் இந்திய வீரர்கள் எல்பிடபுல்யூ கேட்டனர். ஆனால் அம்பயர் அவுட் இல்லை என கூறினார். இதனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரீவ்-யூ கேட்டார். அதில் பந்து முதலில் பேடில் பட்டு செல்வது போல் இருந்தது. ஆனால் தேர்ட் அம்பயரும் நாட் அவுட் என அறிவித்தார். அப்போது அம்பயரிடம் கோலி கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றார். இதனை பலர் மீம்களாக உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.