'கடைசி ஷாட்டில் சிக்சர்னு நினைச்சா'... 'க்ரவுண்ட்லேயே கண்ணீர்விட்டு கதறிய வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 23, 2019 07:46 PM

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட, வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வெயிட் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

New Zealand Players Consoling Carlos Brathwaite

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைப்பெற்ற மற்றொரு போட்டியில், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது.

பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 170 ரன்களை தொடுவதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன் பின்னர் வந்த பிராத்வொய்ட் ஆட்டத்தையே மாற்றினார். ஆட்டத்தின் முதுகெலும்பாக திகழ்ந்த பிராத்வெயிட் 101 ரன்கள் எடுத்திருந்தபோது, ஒரு விக்கெட் மீதமிருந்தது. வெற்றிக்கு வெறும் 6 ரன்களே தேவைப்பட்ட நிலையில், அதிரடியாக தூக்கி அடித்தார்.

மைதானத்தில் இருந்த அனைவரும் சிக்சர் என்று எண்ணியிருந்தபோது, பவுண்டரி லைனில் நின்றிருந்த போல்ட் அபாரமாக கேட்சைப் பிடித்தார். இதனால் 286 ரன்களுக்கு மேற்கு இந்தியத் தீவுகள் 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. மேற்கிந்திய தீவுகள் அணியை சரிவிலிருந்து மீட்டு வந்து, வெற்றிக்கு அருகில் வந்த வாய்ப்பு பறிபோனதை நினைத்து மனமுடைந்த பிராத்வெயிட் மைதானத்தில் கண்ணீர் விட்டார். அவரை நியூசிலாந்து வீரர்கள் சமாதானப்படுத்தி விடைக்கொடுத்தனர்.