‘நடந்தது என்னமோ உண்மைதான்’.. அப்போ அடுத்த போட்டியில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு? .. பிரபல வீரர் சொன்ன பதில்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 21, 2019 06:35 PM

பயிற்சியின் போது காயம் அடைந்த விஜய் சங்கர் குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

Jasprit Bumrah update on Vijay Shankar’s injury

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளை வீழ்த்தியுள்ளது. இதில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டி மட்டும் மழையால் தடைபட்டு ரத்தானது. ஒவ்வொரு போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக ஆடி வரும் நிலையில், அடுத்தடுத்து வீர்ரகளுக்கு ஏற்படும் காயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார். அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசும் போது எதிர்பாராத விதமாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்நிலையில் நேற்று வலைப் பயிற்சியில் ஈடுப்பட்ட போது பும்ரா வீசிய யாக்கர் பந்தில், விஜய் சங்கரின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பயிற்சில் இருந்து பாதியிலேயே விஜய் சங்கர் வெளியேறினார். இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய பும்ரா, ‘விஜய் சங்கருக்கு பந்து அடித்து காயம் ஆனது உண்மைதான். ஆனால் பயப்படும் அளவுக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. அவர் நன்றாக இருக்கிறார்’ என அவர் தெரிவித்தார். ஆனாலும் நாளை(22.06.2019) நடைபெற உள்ள ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் விளையாடுவது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #VIJAYSHANKAR #BUMRAH #TEAMINDIA #INDVAFG