'ஷாப்பிங்' மாலில் 'துரத்தி துரத்தி'... பிரபல வீரரிடம் 'ரசிகரின் இழிவான' செயல் ... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jun 22, 2019 10:14 AM

சொந்த நாட்டு ரசிகரால் பாகிஸ்தான் அணியின் கேப்டன்  சர்பராஸ் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Sarfaraz Ahmed was harassed and heckled by a fan in England

உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில், பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்து வருவதால் அந்த அணி வீரர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளார்கள். அதோடு இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியினை சந்தித்தது. இது அந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் கோபத்தை கிளப்பியது. மோசமான பேட்டிங், பவுலிங் என்று அனைத்திலும் வீரர்கள் சொதப்பி விட்டார்கள் என சமூகவலைத்தளங்களில் காய்ச்சி எடுத்தார்கள்.

இதனிடையே இந்தியாவிற்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கான், டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும் என்று போட்டிக்கு முன்னதாக கூறியிருந்த நிலையில், சர்பராஸின் முடிவு வேறு விதமாக இருந்தது. மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிந்தும், டாஸ் வென்று பீல்டிங் செய்தது அவருக்கு கடுமையான விமர்சனங்களை பெற்று தந்தது. போட்டியில் போதுமான அக்கறை இல்லை, போதிய உடற்பயிற்சி இல்லை, எப்போதும் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள் என, பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்தில் ஷாப்பிங் மால் ஒன்றில் பாகிஸ்தான் அணியின் கேப்டன்  சர்பராஸ் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர் பேச முற்பட, சர்பராஸ் விலகி சென்றார். உடனே அந்த ரசிகர்  “பன்றி போன்று குண்டாக இருக்கிறீர்கள்” என்று வரம்பு மீறி பேசினார். இதனிடையே இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Tags : #PAKISTAN #ICCWORLDCUP2019 #WORLDCUPINENGLAND #SARFARAZ AHMED #HARASSED #FAN #ENGLAND #SHOPPING MALL