'இந்திய அணியில் இவர்தான் பெஸ்ட்'... 'பயிற்சியாளரின் சுவாரஸ்யமான பதில்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 21, 2019 11:32 AM
இந்திய அணியின் சிறந்த பீல்டர் யார் என்றும், மோசமான பீல்டர் யார் என்பது குறித்தும் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 3 வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 7 புள்ளிகளில் உள்ளது. இந்திய அணியின் அடுத்தப் போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் இந்திய அணியின் சிறந்த பீல்டர் மற்றும் மோசமான பீல்டர் குறித்து தெரிவித்துள்ளார்.
அதில் 'கடந்த 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியில் பீல்டிங்கில் பெரிய அளவு மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். அதன்படி சரியாக பீல்டிங் செய்ய உடற்தகுதி மிகவும் முக்கியம் என்பதால், வீரர்களின் உடல் தகுதி பெரிய அளவு கவனம் செலுத்துகிறோம். மேலும் வீரர்கள் உடற்தகுதியுடன் இருந்தால் அவர்களின் வேகம் அதிகரிக்கும். இதனால் 2 ரன்கள் எதிரணியினர் ஓடுவதை தவிர்க்க முடியும். மேலும் இந்தியாவில் பீல்டிங் தற்போது சிறப்பான நிலையில் உள்ளது. இந்திய அணியின் தற்போதைய மோசமான ஃபீல்டர் என்றால் அது சாஹல் தான். ஏனெனில் அவருடைய கைகள் சிறியதாக உள்ளது.
மேலும் விரல்களும் சிறியதாக உள்ளதால் பந்தின் வேகத்தை கணித்து, கேட்சிகளைப் பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் தரையில் வரும் பந்துகளை அவர் சிறப்பாக பீல்டிங் செய்கிறார். இப்போதிருக்கும் இந்திய அணியின் சிறந்த பீல்டர் யார் என்று கேட்டால் விராட் கோலியை சொல்வேன். அவர் சிறப்பாக பீல்டிங் செய்து வருகிறார். மேலும் அவருக்கு அடுத்த இடத்தில் ரவிந்திர ஜடேஜா மிகவும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரராக உள்ளார்' என்று தெரிவித்தார்.